தரமற்ற முகக் கவசங்கள் விற்பனையை அரசு தடுக்க வேண்டும் - தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

தரமற்ற முககவசங்கள் விற்பனை படுஜோராக நடைபெறுவதாகவும் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.


" alt="" aria-hidden="true" />


இது குறித்து அக்கட்சியின் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில்:


இந்தியா உள்ளிட்ட 209 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கபட்ட மாநிலத்தில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.


இருப்பினும், கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், ஊரடங்கை நீட்டிக்க பல்வேறு மாநில அரசுககள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். தொடர்ந்து, கடந்த 14-ம் தேதி நாட்டு மக்களிடம் 4-வது முறையாக உரையாற்றிய  பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக அதிரடியாக அறிவித்தார். ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்த போதிலும் மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் வீதிகளுக்கு வருவது அதிகரித்து உள்ளது.


இதற்கிடையே, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் வெளியை வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு   பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் பொதுமக்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். தங்களது குடும்பங்களை விட்டு விட்டு பொதுமக்களை பாதுகாக்க தொடர்ந்து இரவு பகல் பார்க்காமல் பணி செய்து வரும் காவல்துறையினருக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் உள்ள மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்திலும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் மத்திய, மாநில அரசுகள் பணிவுடன் சொல்வதை கேட்காமலும், கண் முன்பு நிற்கும் கொரோனா ஆபத்தை உணராமலும் பலர் முக கவசம் அணியாமல் வெளியே சென்று வருகின்றனர்.


முககவசம் அணியாமல் வெளியே வந்தால் அபாரதம் விதிக்கப்படும் என அந்தந்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளனர். முககவசங்கள் மருந்தகங்களில் விற்பனை செய்வதை விட சாலையோரங்களில் முககவசம் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது. தரமற்ற துணிகளால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் , இந்த முககவசங்களால் மக்களுக்கு வேறு விதமான நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.


கார்ட்டூன் படங்கள், நடிகர்களின் படங்களை பிரிண்ட் செய்து முககவசங்கள் தற்போது 30 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கவரும் வகையில் இந்த முககவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. முககவசங்களை பொறுத்தவரை ஒருநாட்களுக்கு மேல் பயன்படுத்த முடியாது. ஆனால்  இந்த வகையான முககவசங்க ஒரு முறை பயன்படுத்திவிட்டு துக்கி எறிவது கிடையாது. இதனையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.


எந்த மருத்துவ விதிகளையும் பின்பற்றாமல்  தரமற்ற துணிகளை கொண்டு தயாரித்து விற்பனை செய்யப்படும் இதுபோன்ற முககவசங்களால் மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே தரமற்ற முககவசங்கள் விற்பனை அரசு கட்டுப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுக்கிறேன் என கூறி உள்ளார்